63-வது குடியரசு தினம்!
இந்திய திரு நாட்டின் 63-வது குடியரசு தினம் கிரஸன்ட் நல்வாழ்வு சங்கத்தில் (CWO) நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் ஜனாப் ஆடிட்டர் ஐ.முஹம்மது இல்யாஸ் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
கிரஸண்ட் நல்வாழ்வு சங்க உயர் மட்டக்குழு உறுப்பினர் காமில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னால் நிருவாகி ரியாஸ் அஹமது மற்றும் உறுப்பினர்கள் காலித், ஜெய்னுல் ஆபிதீன், மற்றும் நிஸார், ரிஜ்வான் ஆகியோர்களும், ஓரியண்டல் பள்ளிக்கூட மாணவிகளும் கலந்துக்கொண்டனர்.
